Sunday, February 6, 2011

இஸ்லாமியருக்குச் சில கேள்விகள்

அன்பான இஸ்லாம் சகோதரரே, இஸ்லாம் ஒரு தவறான மார்க்கம் என்று நிரூபிப்பதற்காக நான் இந்தக் கேள்விகளைஎழுப்பவில்லை. எனினும், உண்மை அறிந்து கொள்ளப் படுவதற்கான விவாதத்தை ஊக்குவிக்கும் படிக்கு இங்கே இவை தரப்ப்பட்டிருக்கிறது.

1. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான் (சுரா 5:9) என்று குர்-ஆன் கூறுகிறது.

அ) கேள்வி: நியாயத்தீர்ப்பின் நாளில் இரட்சிப்பைப் பெறுவதற்கு போதுமான அளவு நற்செயல்களை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்களா?

ஆ) கேள்வி: நீங்கள் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்விடம் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?

2. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். 'எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்' என்று கூறுவர் (சுரா 66:8) என்று குர்-ஆன் கூறுகிறது. நீங்கள் மன உண்மையாகஇருந்தால், இறைவன் தீமைகளை அழித்துவிடக் கூடும் என்று சொல்லப்பட்டிருக்கிறதைக் கவனியுங்கள்.

அ) கேள்வி: அல்லாஹ்வினால் மன்னிக்கப்படத் தக்கதாக நீங்கள் மன உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வீர்கள்?

ஆ) கேள்வி: நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக மன உண்மையாக இருந்தாலும் கூட, ஒருவேளை நீங்கள் மன்னிக்கப்படலாம் என்பதை அறிவது உங்களுக்கு மனச்சமாதானத்தைத் தருகிறதா?

இ) கேள்வி: அல்லாஹ்வுக்கு முன்பாக உங்கள் மனம் திரும்புதலில் மிகவும் உண்மையாக நான் இருக்கிறேன் என்று நீங்கள் உங்களைப் பற்றிக் கூறினால், நீங்களே உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வீர்கள்?

ஈ) கேள்வி: பரிசுத்தமும் நீதியுமுள்ள இறைவனுக்கு முன்பாக போதிய மனவுண்மையைக் காண்பிக்குமளவுக்கு உங்கள் இருதயம் உண்மையிலேயே நல்ல இருதயமாக இருக்கிற்தா?

உ) கேள்வி: ஆம் என்று நீங்கள் சொல்வீர்கள் எனில், “நீங்கள் பெருமை கொண்டிருக்கிறீர்களா? “ என்று நான் நேர்மையாகவும், தாழ்மையு டனும் கேட்கிறேன்.

ஊ) கேள்வி: நான் பெருமை கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் சொல்வீர்கள் எனில், பின்னே உங்கள் மனவுண்மையில் தற்பெருமை கொண்டிருக்கிறீர்களா?

3.கிறிஸ்தவத்தில், மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவனாகிய இயேசு நம் பாவங்களுக்கான விலைக்கிரயத்தைச் சிலுவையின் மேல் மரித்துச் செலுத்தினார் (1பேதுரு2:24). இதினிமித்தம், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் அவருக்குள் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறோம், அவர் மேல் உள்ள விசுவாசத்தினால் கிருபையைக் கொண்டு நாங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிற படியால், தேவனைப் பிரியப்படுத்த போதுமான நற்செயல்களைச் செய்யவேண்டுமே என்ற கவலை எங்களுக்கில்லை (எபேசியர் 2:8,9).

அ) கேள்வி:நீங்கள் போதுமான நற்செயல்களை செய்திருந்தாலும் கூட நியாயத்தீர்ப்பு நாளில் இரட்சிக்கப் படுவீர்களா இல்லையா என்பதை நீங்களே அறியாமல் இருக்கிறீர்கள். இப்படியிருக்க நாங்கள் இயேசுவில் எங்களுக்கு உள்ள இரட்சிப்பின் நிச்சயத்தை விட்டு விட்டு குர்-ஆன் சட்டங்கள் கூறுகிறதை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

4. இறைவன் அன்பாகவே இருக்கிறார் 1யோவான்4:16) என்றும் அவர் அனைவரையும் நேசிக்கிறார் (மத்தேயு5:43-48; யோவான் 3:16) என்று வேதாகமம் கூறுகிறது. இறைவன் அன்பானவர் என்று குர்-ஆனில் ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை.உண்மையைச் சொல்வதானால், அல்லாஹ் அவன் மீது நம்பிக்கை இல்லாத வரை வெறுக்கிறான் (அ) எதிர்க்கிறான் என்று குர்-ஆன் கூறுகிறது (2:98, 3:32).

அ) கேள்வி: நம்பிக்கை இல்லாதவரை அல்லாஹ் விரும்பமாட்டான் என்றால், அதிலும் குறிப்பாக குர்-ஆன் வசனமே இப்படிச் சொல்லும்போது அல்லாஹ் அன்புடையவன் என்று உங்களால் கூற முடியுமா?

ஆ) கேள்வி: ஆம், அல்லாஹ் அன்பானவன் என்று நீங்கள் கூறுவீர்கள் எனில், அல்லாஹ் எல்லாரையும் நேசிக்காமல் இஸ்லாமியரை மட்டும் ஏன் விரும்புகிறான்?

இ) கேள்வி: அல்லாஹ் அன்பானவன் என்று நீங்கள் சொல்வீர்கள் எனில், அனைவரையும் நேசிக்கும் வேதாகமத்தின் இறைவனை விட அவன் அன்பானவனா?

5. வேதாகமத்தில், ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று இயேசு யோவான் 15:13ல் சொன்னார். கிறிஸ்தவத்தில், இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவனாக இருக்கிற படியால் - மாபெரும் அன்பின் செயல் இறைவனாலேயே நிகழ்த்திக் காட்டப்பட்டது (யோவான் 1:1,14; கொலோசெயர் 2:9). அன்பைக் குறித்த விசயத்தில் இயேசு தம் வார்த்தைகளை நிறைவேற்றியவராக இருக்கிறார். அவர் நமக்காக அவருடைய உயிரையே கொடுத்தார்.

அ) கேள்வி: அல்லாஹ்வினால் நிகழ்த்திக் காட்டப்பட்ட மாபெரும் அன்பின் செயல் என்ன?

ஆ) கேள்வி: இயேசு சொன்னது உண்மை எனில், அல்லாஹ்வை சேர்ந்தவர்கள் எவராவது அந்த மாபெரும் அன்பின் செயலை நிகழ்த்திக் காட்டியிருக்கவேண்டும் அல்லவா?

இ) கேள்வி: (கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வதானால்) இறைவனால் தாமே நிகழ்த்திக்காட்டப்பட்ட அந்த மாபெரும் அன்பின் செயலை நான் விட்டுவிட வேண்டும் என்று ஒரு இஸ்லாமியராகிய நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்?

6. காபிரியேல் தூதன் தான் பரிசுத்த ஆவி என்று இஸ்லாம் போதிக்கிறது. வேதாகமத்தில், பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர் களுக்குள் வாசம் செய்கிறார் என்று வாசிக்கிறோம்.

அ) கேள்வி: காபிரியேல் தூதன் தான் பரிசுத்த ஆவி எனில், நமக்குள் அவர் எப்படி வசிக்க முடியும்? ( க்வனிக்க: நெஸ்ல் ஆலண்ட் (Nestle Aland ) என்ப்வரின் கிரேக்க புதிய ஏற்பாட்டிற்கான மூல மொழி ஆராய்ச்சி நூலின் படி (Greek New Testament Textual Apparatus) கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வேதாகம வசனங்களில் எவ்வித வார்த்தை மாற்றமும் இல்லை. அவை மிகவும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு நமக்கு கிடைத்திருக்கிற்து. )

i. உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள். (2 தீமோத்தேயு 1:14)

ii. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1கொரிந்தியர் 3:16)

7. பொய் சொல்வது சரியா?

அ) கேள்வி: முகமது தவறாக பொய்க்கு ஆதரவாகப் பேசி விட்டாரா? பொய் பேசுவது சரிதானா? முஹம்மது பின் மஸ்லமா என்பவர் எழுந்து , ஓ அல்லாஹ்வின் தூதரே! இவனை (கப் பின் அல்-அஷ்ரப்) நான் கொல்ல விரும்புகிறீரா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். அப்படியானால் (கப் ஐ ஏமாற்ற) ஒரு (பொய்யான) காரியத்தைக் கூற என்னை அனுமதியும் என முஹம்மது பின் மஸ்லமா கேட்டார். நீ சொல்லலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார். (ஹதீத் பாகம் 5,#369).

"Muhammad bin Maslama got up saying, "O Allah's Apostle! Would you like that I kill him [Ka'b bin Al-Ashraf]?" The Prophet said, "Yes," Muhammad bin Maslama said, "Then allow me to say a (false) thing (i.e. to deceive Kab). "The Prophet said, "You may say it," (Hadith Vol. 5, Book 59, #369).

ஆ) கேள்வி: யார் பரிசுத்தமானவர், அல்லாஹ்வா அல்லது யாஹ்வே இறைவனா?

இ) கேள்வி: மேலே ஹதீத்தில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட வார்த்தைகளில் இருந்து முஹம்மது பொய்க்கு ஆதரவாக பேசியதைக் காண்கிறோம். கிறிஸ்தவர்களின் இறைவன் ஒருபோதும் பொய்யை அங்கீகரிக்க மாட்டார். இஸ்லாமின் இறைவன் பொய்யை அங்கீகரிக்கிறாரா? அப்படி இல்லையெனில், முஹம்மது தவறு செய்ய வில்லையா? முஹம்மது செய்தது த்வறு இல்லை எனில், அல்லாஹ் பொய்யை அங்கீகரிக்கிறாரா? யார் மிகவும் பரிசுத்தமானவர், அல்லாஹ்வா அல்லது வேதாகமத்தின் இறைவனா? கிறிஸ்தவத்தின் இறைவன் மிகவும் பரிசுத்தமானவர்.

No comments: