Saturday, June 28, 2008

இஸ்லாம் விவாதங்களில் கலந்து கொள்ளுமுன் கவனிக்கவேண்டியவை

குர்-ஆன் சம்மந்தப்பட்ட இப்படிப்பட்ட கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்பவர்களுக்காக சில செய்திகள்.

1. இக்கூட்டங்கள் முஸ்லீம்களால் நடத்தப்படுவதால், பெரும்பான்மையாக 90% அதற்கு அதிகமாக இஸ்லாமியர்களே அரங்கத்தை நிரப்பியிருப்பார்கள்.

2. மற்ற மத நண்பர்களோ, சொற்ப எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

3. ஏற்கனவே, நாம் "இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதிப்பது எப்படி" என்ற கட்டுரையில் பார்த்தது போல, எந்த கேள்வி கேட்டாலும், அதற்கு தயாராக ஒரு பதில் வைத்து இருப்பார்கள்.

இந்த கட்டுரையை ஒரு முறையாவது படிப்பது நல்லது. அதை இங்கு படிக்கலாம். http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=179

4. எக்காரணத்தைக் கொண்டும் கேட்கும் கேள்வியில், முகமதுவையும், குர்-ஆனையும், இஸ்லாமையும் அவமானப்படுத்துவது போல் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

உதாரணத்திற்கு:

"ஏன் முகமது இத்தனை பொண்டாட்டி கட்டிக்கொண்டார், இது பாவம் இல்லையா, இது சரியா? இவர் தீர்க்கதரிசியா?" என்ற கேள்வி இஸ்லாமியர்களை கோபப்படுத்தும்.

அதற்கு பதிலாக இப்படி கேட்கலாம்: "குர்-ஆன் படி ஒரு முஸ்லீம் 4 மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளும் படி அனுமதியை அல்லா கொடுக்கும் போது, முகமது மட்டும் ஏன் 10 க்கும் அதிகமாக திருமணங்களைச் செய்தார்?" என்று கேட்கலாம்.

5. ஒரு வேளை கேட்கிறவர் கிறிஸ்தவராக இருந்துவிட்டால், கேட்கும் கேள்விக்கு பாதி பதில் சொல்லிவிட்டு, உடனே பைபிளில் கூட இப்படி உள்ளது(தாவிதுக்கும், சாலொமோனுக்கும் அனேக மனைவிகள் இருந்தார்கள் இல்லையா, அது தவறில்லையா என்று கேட்டு) என்று பதிலை திசை திருப்பிவிடுவார்கள்.

6. ஒருவருக்கு ஒரு கேள்வி கேட்க மட்டும் அனுமதி கொடுப்பதால், நம்மால் பல குறுக்கு கேள்வி கேட்டு உண்மையை அந்த அரங்கத்தில், சொற்ப நேரத்தில் உலகிற்கு தெரியப்படுத்த முடியாது.

7. கேள்வி கேட்டும் நபர்களுக்கு(கிறிஸ்தவருக்கு) தெரிந்து இருக்கவேண்டிய சில விவரங்கள்:

a) முதலில் குர்-ஆனையும், ஹதீஸ்களையும் முழுவதுமாக தெரிந்துக்கொண்டு கேள்வி கேட்பது நல்லது.
b) பைபிள் பற்றி இஸ்லாமியர்கள் முன்வைக்கும் கேள்விகள் என்ன? அவர்கள் பைபிள் பிழை உள்ளது என்று எடுத்துக்காட்டும் வசனங்கள் என்ன? அதற்கு சரியான கிறிஸ்தவ பதில் என்ன? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்?

c) இவைகளை தெரிந்துக்கொள்ளாமல், அவர்களிடம் கேள்வி கேட்டால், அவர்கள் உடனே பைபிளில் அவர்கள் உள்ளது என்றுச் சொல்லும் ஒரு முரண்பாட்டை எடுத்துச் சொல்லி அதற்கு நம்மிடம் பதில் எதிர்பார்த்தால், நம் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள். மட்டுமல்ல, அது அவர்களுக்கு ஒரு வெற்றியாக மாறிவிடும்.

8. எனவே, என் கருத்து என்னவென்றால், இஸ்லாம் பற்றியும், பைபிள் பற்றியும்( பைபிள் பற்றி அவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துக்கொள்வது) முழுவதும் தெரிந்துக்கொள்ளாமல், கேள்வி கேட்பது, ஆபத்து.(Half Knowledge is Dangerous).

9. ஆகையால், இப்போதைக்கு நமக்கு(நாம் ஒரு சதவிகிதம் கூட இஸ்லாமைப் பற்றி, பைபிளைப்பற்றி(இஸ்லாம் கேட்கும் கேள்விகள் அடிப்படையில்) இன்னும் தெரிந்துக்கொள்ளவில்லை என்பது என் கருத்து) சொற்ப ஞானம் இருப்பதால், கேள்விகள் கேட்காமல் முதலில், இப்படிப்பட்ட ஒன்று அல்லது இரண்டு கூட்டங்களை பார்த்து அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், என்பதை எல்லாம் கற்றுக்கொண்டு கேள்விகள் கேட்டால், அது கிறிஸ்துவுக்கு மகிமையாக மாறும்.

10. அவர்கள் இக்கூட்டங்களை ஒழுங்கு செய்வது, மதங்களின் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படும் என்பதற்காக அல்ல, இந்துக்களை அவமானப்படுத்தவே, மற்றும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என்பதை காட்டவே. இதற்கு சரியாக, இக்கூட்டங்களுக்கு வரும் இந்துக்கள் மிகக்குறைவாக இருப்பார்கள், விரல்களால் எண்ணிவிடலாம்.

( திரு ரவி சங்கர், திரு ஜாகிர் நாயக் கூட்டத்திலும், இப்படித் தான் நடந்தது. ரவி சங்கர், அன்பு பற்றி, ஒற்றுமைப் பற்றிச் சொன்னால், ஜாகிர் நாயக் மட்டம் தட்டிவிட்டார் இவரை. ஜாகிர் நாயக் ரவி சங்கரின் எல்லா புத்தகங்களையும் படித்து வந்தார், ரவி சங்கரோ, வெறும் கையோடு வந்துவிட்டார். மக்கள் கூட்டமும் 95% : 5% என்ற முறையில் இருந்தது. ரவி சங்கருக்கு அதிகமாக கைதட்ட ஒரு நாதியும் இல்லை.)

அப்படி வரும் மாற்று மத அன்பர்கள்(இந்துக்கள், கிறிஸ்தவர்கள்) கேட்கும் கேள்விகள், மிக சுலபமாக பதில் சொல்வது போல கீழ் கண்டது போல் இருக்கும்:

a ) ஏன் புர்கா பெண்கள் அணிகிறார்கள்? இதற்கு பதில் மிக சுலபம், நாட்டில் நடக்கும் கற்பழிப்புக்கள் பட்டியலிட்டு காட்டுவார்கள். நம் பெண்கள், தங்கள் உடலை ஊரில் உள்ள ஆண்களுக்கு காட்டுகிறார்கள் என்று, கேள்வி கேட்பவர் மீது பல்டி அடிப்பார்கள்.

b) ஏன் தாடி வைக்கிறீர்கள்?
c) ஏன் 5 வேளை தொழுகிறீர்கள்?
d) ஏன் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறீர்கள் ?
e) ஏன் மக்காவை நோக்கியே தொழுகிறீர்கள்?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் மிக சுலபமாக, அருமையாக, இஸ்லாமுக்கு நல்ல பெயர் வரும்படி சொல்லுவார்கள்.

எனவே, இப்படிப்பட்ட கூட்டத்தில் நீங்கள் பங்கு பெறுவது இது முதல் முறையாக இருந்தால், தயவு செய்து ஒரு கேள்வியும் கேட்க வேண்டாம். அது நமக்கு (கிறிஸ்தவத்திற்கு அவதூறு) கொண்டுவரும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நன்றாக கேட்டு, சில விவரங்களை சேகரித்துக்கொண்டு வாருங்கள், அதனை இத்தளத்தில் விவாதிப்போம், ஆதாரங்கள் சேகரிப்போம், அறிவை பெருக்கிக்கொள்வோம். பிறகு களத்தில் இறங்வோம்.


நாம் எப்போது கேள்வி கேட்கலாம், என்றால், ஒரு கிறிஸ்தவன் தெரியாமல் மாட்டிக்கொள்ளும் போது, இஸ்லாமியர்கள் பைபிளை தாக்கும் பொது, அந்த நேரத்தில் நமக்கு தெரிந்த குர்-ஆன் சம்மந்தப்பட்ட கேள்விகளைக் கேட்பது அதிக உதவியாக இருக்கும். இக்கேள்விகள் அவர்கள் பதில் சொல்லமுடியாததாக இருக்கவேண்டும்.

இருந்தாலும், நான் சில கேள்விகள கேட்ட வேண்டும் என்று எண்ணுகின்றேன் என்று சொல்பவர்களுக்கு, இன்று மாலைக்குள் சில கேள்விகளை விவரமாகத் தருகிறேன்.

சில நேரங்களில் கீழ்கண்ட வசனம் நமக்கு உதவிச் செய்யும்:
நீதிமொழிகள் 17:28 பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்

Source:http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=252

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in